100 நாள் வேலை முறையாக வழங்காததால் சாலை மறியல்

100 நாள் வேலை முறையாக வழங்காததால் சாலை மறியல்

 சிறுவள்ளூர் ஊராட்சியில்100 நாள் வேலையை முறையாக வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

சிறுவள்ளூர் ஊராட்சியில்100 நாள் வேலையை முறையாக வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் ஊராட்சியில் நேற்று 100 நாள் வேலை சரியான முறையில் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பொது மக்கள் கூறிய போது:- ஒவ்வொரு வாரமும் 100 நாள் வேலை 3 தினம், 4 தினம் அல்லது 5 தினம் என்று தான் வழங்கி வருகிறார்கள். எந்த வாரத்திலும் எங்களுக்கு சரியான முறையில் வேலை 6 நாள் வழங்குவதில்லை .அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் இந்த 100 நாள் வேலை சரியான முறையில் வழங்குவதற்கு தலைவர் ஏன் அலட்சியப்படுத்துகிறார்கள். 100 நாள் வேலை அரசாங்கம் தான் வழங்குகிறது ,அதை மக்களுக்கு சரியான முறையில் வழங்குவது இவருக்கு என்ன பாதிப்பு ?மக்களுக்கு 100 நாள் வழங்குவதில் ஏன்? பாகுபாடு பார்த்து வேலை வாங்குகிறார். அது மட்டும் இல்லாமல் 100 நாள் வேலை வழங்கும் பொழுது இடையில் ஒரு நாள் ,இரண்டு நாள் விடுமுறை வந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்வது.

மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மற்றும் உதவி இயக்குனர் ஊராட்சிகள் சரண்யாதேவி, இவர்கள் விடுமுறை கொடுத்துவிடுகிறார்கள் அதனால் நான் எப்படி வேலை வாங்க முடியும் என்று பஞ்சாயத்து தலைவர் சி.அண்ணாமலை கூறி வருகிறார். அதேபோல் நேற்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், எந்த ஒரு விடுமுறையும் அறிவிக்கவில்லை ஆனால் நேற்று 100 நாள் வேலை அனைத்தும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் கூறியதாக பஞ்சாயத்து தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். இது மாவட்ட ஆட்சியர் கூறியதா ,இல்லை பஞ்சாயத்து தலைவர் கூறியதா என்று தெரியாமல் பொது மக்கள் கொந்தளிக்கின்றனர். மேலும் இந்த விடுமுறை தகவலை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது வட்டார வளர்ச்சி அலுவலர் மழை பெய்து வருவதால் நூறு நாள் வேலையில் மரம் சாயும் நிலையும் மற்றும் கம்பம் சாயும் நிலையும், பாம்பு போன்ற உயிர்கொல்லும் விபத்துக்கள் ஏற்படுவதால் 100 நாள் வேலை இன்று வேண்டாம் மக்களுக்குபாதுகாப்பு வேண்டும் என்பதற்காக விடுமுறை கூறியுள்ளோம் என்றார்.

ஆனால் பஞ்சாயத்து தலைவர் தேவையில்லாமல் மாவட்ட ஆட்சியர் மீதும் உதவி இயக்குனர் ஊராட்சிகள் மீதும் பொய்யான ஒரு தகவலை கூறி வருகிறார். 100 நாள் வேலை வழங்காத காரணம் என்னவென்றால் மழை நேரத்தில் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக 100 நாள் வேலை இன்று ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் மற்ற தினங்களில் 100 நாள் வேலை சரியான முறையில் வழங்காதது தலைவர் அவர்கள் தான் பொறுப்பு .ஏனென்றால் 100 நாள் வேலை பதிவு செய்தபடி சரியாகத்தான் நாங்கள் வழங்கி வருகிறோம்.

பஞ்சாயத்து தலைவர் சரியான முறையில் வழங்காததாலும் மக்களுக்கு 100 நாள் வேலை சரியான முறையில் கிடைக்காததாலும் பொதுமக்கள் சாலை மறியல் செய்து வருகிறார்கள் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் கூறினார்.

Tags

Next Story