திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம், குளிச்சூர் பகுதியில் குடிநீரை விவசாய நிலத்திற்கு பயன்படுத்துவதால் முறையான குடிநீர் கிடைக்காததால் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்க நத்தம் ஊராட்சி குளிச்சூர் பகுதியில் சுமார் இரண்டு மாதகாலமாக முறையான குடிநீர் இப் பகுதிக்கு வருவதில்லை என்றும் குடிநீர் விநியோகம் செய்யும் பைப்பின் மூலம் கள்ளத்தனமாக பல்வேறு இணைப்புகளை பொருத்தி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
இந்நிலையில், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் 50-க்கும் மேற்பட்டோர் வெலக்க நத்தம் பகுதியில் இருந்து செட்டேரி வரை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் தகவலின் அடிப்படையில் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
உடனடியாக ஊராட்சி மன்ற பஞ்சாயத்து தலைவர் ராமன் சம்பவயிடத்திர்க்கு விரைந்து வந்து உடனடியாக முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கள்ளத்தனமாக குடிநீரை விவசாய நிலத்திற்கு பயன்படுதவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர் என்பது குறிப்பிட தக்கது.