இளைஞர் படுகொலை இரண்டாவது நாளாக சாலை மறியல்!

இளைஞர் படுகொலை இரண்டாவது நாளாக சாலை மறியல்!

சாலை மறியல்

இளைஞர் படுகொலை இரண்டாவது நாளாக சாலை மறியல்!
புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே குற்றவாளி எனக் கூறப்படுபவரின் வீட்டின் மாடியில் இருந்த வைக்கோல் போருக்கு திங்கள்கிழமை நள்ளிரவு பெண்கள் சிலர் தீ வைத்தனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் தட்சிணாமூர்த்தி தெருவைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் திங்கள்கிழமை வெட்டிக் கொ செய்யப்பட்டார். இதனைக்கண்டித்து அவரது உறவினர்கள் பிரகாஷின் உடலை வாங்க மறுத்து திங்கள்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி அருகேயும், அண்டகுளம் பகுதியிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2ஆவது நாளாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே பிரகாஷின் உறவினர்கள் திங்கள்கிழமை நள்ளிரவு குற்றவாளி என கூறப்படும் பிரதீப் வீட்டுப் பகுதியில் குவிந்தனர். அப்போது, பிரதீப் வீட்டின் மாடியில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போருக்கு பெண்கள் சிலர் திடீரென தீ வைத்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸார் தனியே விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும்உறவினர்கள் வாங்க மறுத்ததால் பிரகாஷ் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையிலேயே உடல் வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story