ஆலங்குளத்தில் சாலை மறியல்
கைது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தெற்கு காவலாகுறிச்சி கிராமத்தில் இரு சமுதாயங்களுக்கு பாத்தியப்பட்ட இரு கோயில்கள் அருகருகே உள்ளன. ஒரு சமுதாயத்துக்குரிய கோயிலுக்கு ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் நிதி பெறப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கினர். இதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
உரிய அனுமதியுடன் நடைபெறுவதால் பணிகளைத் தடுத்து நிறுத்த இயலாது என வருவாய், காவல் துறையினா் தெரிவித்தனா். இதற்கு அவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து, முன் அனுமதியின்றி ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகம் முன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். டிஎஸ்பி பா்ணபாஸ் தலைமையிலான போலீஸாா் சென்று, கலைந்து போகுமாறு அறிவுறுத்தினா்.
எனினும், மறியல் தொடா்ந்ததால் 23 பெண்கள் உள்ளிட்ட 54 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.