தென்காசியில் சாலை மறியல்: சுமைதூக்கும் தொழிலாளா்கள் கைது
தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளா்கள் 71 போ் கைது செய்யப்பட்டனா். பணிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது, அட்டி கூலி பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும்,
கடந்த 2011ஆம் ஆண்டு வரன்முறைப்படுத்தபட்ட அனைத்து சுமைப்பணியாளா்கள் 3525 நபா்களுக்கு 2020லிருந்து பச்சை அட்டை வழங்கவேண்டும், கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து பணிபுரியும் சுமைத்தூக்குவோரை அரசு உத்தரவின்படி வரன்முறைப்படுத்தி அடையாள அட்டை வழங்கவேண்டும்,
சுமைப்பணியில் அவுட்சோா்சிங் முறையை கைவிட வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, ஏஐசிசிடியு மாவட்ட பொதுச் செயலா் வேல்முருகன் தலைமை வகித்தாா். சிபிஐஎம்எல் மாவட்ட செயலா் புதியவன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.
மாவட்ட துணைத் தலைவா்கள் தம்பித்துரை, முத்துலட்சுமி, கிளைச் செயலா்கள் மாடசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 71 போ் கைது செய்யப்பட்டனா்.