சேதுபாவாசத்திரம் அருகே சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

சேதுபாவாசத்திரம் அருகே சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியல்
பேராவூரணி அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது.

சேதுபாவாசத்திரம் காவல் சரகம் புக்கரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் ரிஷ்வா ( 4 ) யுகேஜி மாணவரான இவர் சில தினங்களுக்கு முன்பு கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திருக்குறள் போட்டியில் கலந்து கொண்டு மேடையில்,

திருக்குறள் சொல்லிக் கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் மற்றும் மணி ஆகியோர் தங்கதுரையின் மேல் இருந்த முன்விரோதம் காரணமாக அவரது மகன் மேடையில் நின்ற ரிஷ்வா மீது கல் வீசி தாக்கியதில் ரிஷ்வாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு,

தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . இது குறித்து சேதுபாவசத்திரம் காவல் நிலையத்தில் தங்கதுரை புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மணி என்பவரை மட்டும் கைது செய்து தலைமறைவான கதிர்வேலுவை கைது செய்யவில்லை.

கதிர்வேலுவின் சகோதரர் ஒருவர் காவல்துறையில் பணிபுரிவதால்தான் கைது செய்யவில்லை என போலீசார் மேல் ஆத்திரமடைந்த உறவினர்கள் பட்டுக்கோட்டை -சேதுபாவாசத்திரம் மெயின் ரோட்டில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவசத்திரம் சப் இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், புக்கரம்பை ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது.

திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் பட்டுக்கோட்டை ,சேதுபாவாசத்திரம் ,,பேராவூரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story