பள்ளிபாளையத்தில் சாலை மறியல் போராட்டம்
சாலை மறியல் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் நடைபெற்றது
நாடு முழுவதும் இன்று மத்திய பிஜேபி அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும், அரிசி, பருப்பு ,உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விளைவு உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும்! ரயில்வே, பாதுகாப்புத்துறை, தொழிற்சாலைகள் உள்ளிட்ட துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது ! தொழிலாளர் நல சட்டங்கள் திருத்துவதை கைவிட வேண்டும் ! மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஒட்டமெத்தை இந்தியன் அரசு வங்கி முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே .மோகன் தலைமை தாங்கினார் . இதில் ஏஐடியூசி, சிஐடியு, எல்பிஎப், மதிமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், இந்த சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். மறியலில்ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை பள்ளிபாளையம்போலீசார் கைது செய்து பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் தங்க வைத்தனர்..
Next Story