குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்!

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்!

சாலை மறியல்

விராலிமலை அருகேயுள்ள கோத்திராபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர்.

விராலிமலை அருகேயுள்ள கோத்திராபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர். மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கோத்திராபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரம் குடியிருப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் தேவைக்காக திருச்சியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை பகுதிக்கு அதிக நீர் தேவை இருப்பதால் இதுவரை வழங்கி வந்த நீரின் அளவை குறைத்ததோடு கடந்த 10 நாள்களுக்கு மேலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரியப்படுத்தியும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லையாம்.இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் காலி குடங்களுடன் விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி முத்துராஜா மற்றும் வருவாய் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அளித்த உறுதியின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மக்களில் இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story