விருதுநகர் அருகே காலிகுடங்களுடன் சாலை மறியல்

விருதுநகர் அருகே காலிகுடங்களுடன் சாலை மறியல்
இரண்டு மாதங்களாக குடிநீர் வரவில்லை என்று கூறி பாவாலி பஞ்சாயத்தை கண்டித்து காலிகுடங்களுடன் மொதுமக்கள் சாலை மறியல்
விருதுநகர் அருகே இரண்டு மாதங்களாக குடிநீர் வரவில்லை என்று கூறி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாவாலி பஞ்சாயத்தில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 12வது வார்டில் ரோஜா நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த இரண்டு மாதங்ககளுக்கு மேலாக பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை எனவும், இது சம்மதம்மாக பல முறை பாவாலி பஞ்சாயத்தில் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மேலும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, வாறுகால் வசதி, கழிப்பிட வசதி செய்து தரவில்லை எனவும் இதனால் கழிவுநீர் தேங்கி நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளதாகவும், இரவில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சமாக இருப்பதாகவும் ஆகையால் தங்கள் பகுதிக்கு தேவையான இந்த அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பாவாலி பஞ்சாயத்தில் பலமுறை முறையிட்டும் இதுவரை பஞ்சாயத்து தலைவர் அழகம்மாள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்,

அதற்கு உரிய விளக்கம் தரவில்லை எனவும் தெரிவித்தனர் . இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் விருதுநகர் டிடி கே ரோடு - பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இந்த தகவலறிந்த மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர்.

பொதுமக்களின் சாலை மறியலால் சுமார் அரைமணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story