நம்பியூர் அருகே கனமழையால் சாலை துண்டிப்பு

நம்பியூர் அருகே கனமழையால் சாலை துண்டிப்பு

வெள்ளப்பெருக்கு

நம்பியூரில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் நேற்று இரவு கனமழை பெய்தது . இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சென்ற நிலையில் சாவக்காட்டு பாளையம் அருகே உள்ள அழகன்பாளையத்தில் உள்ள சாலை மழைநீரால் அடித்து செல்லப்பட்டது. அழகன்பாளையத்திலுள்ள குளம் தனது முழு கொள்ளவை எட்டிய நிலையில் குளத்திலிருந்து வெளியே மழைநீர் சாலையின் வழியாக சென்றதால் சாலை 15 அகலத்திற்கு அடித்து செல்லப்பட்டது. இதனால் அழகன்பாளையம் - நம்பியூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி சார்ந்த மக்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்றி வருகின்றனர்.

Tags

Next Story