18வருடங்களுக்கு பின் அமைக்கப்பட்ட சாலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
சாலை
செந்தியம்பலம் பகுதியில் சுமார் 18வருடங்களுக்கு பின் சாலை அமைக்கப்பட்டதால் நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி செந்தியம்பலம் நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையான சாயர்புரம் மின்கடை பஜார் வழியாக வரும் பிரதான சாலை தார் சாலை அமைக்கவேண்டும் என ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்.எல்.விடம் கோரிக்கை வைத்தனர். முதலமைச்சர் சாலை திட்டத்தில் இந்த சாலையை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.இந்த சாலை கடந்த நவம்பர் மாதம் 30ம்தேதி வேலை ஆரம்பித்து பின் 3மாதங்களாக கிடப்பில் இருந்தது. கடந்த 6ம்தேதி செந்தியம்பலம் கிராமத்திற்கு எம்எல்ஏ ஆய்விற்கு வந்தபோது சேர்வைக்காரன்மடம் ஊராட்சி உபதலைவர்ஏஞ்சலின் ஜெனிட்டா,வார்டு உறுப்பினர்கள் ஹேமா, பீற்றர் மற்றும் திமுக கிளை செயலாளர்கள் மைக்கேல் ஜெயசிங் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கிடப்பில் கிடக்கும் சாலையை அமைக்க மனு அளித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு சாலையை அமைக்க வலியுறுத்தினார். இன்று தார் சாலை அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவுக்கு நன்றி தெரிவித்தனர்
Tags
Next Story