போதமலை பகுதியில் சாலை அமைக்கும் பணி - மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு

போதமலை பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழூரில் நபார்டு கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19.57 கோடி மதிப்பீட்டில் போதமலை மலை கிராமமான கீழூர் வழியாக வடுகம் முதல் மேலூர் வரை சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டாறிந்தார். தொடர்ந்து, ராசிபுரம் அடுத்த வடுகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளின் வருகை விபரம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் இருப்பு, மருத்துவர் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்காக நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story