செம்மண்கூடல் ஊராட்சியில்ரூ.5 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

செம்மண்கூடல் ஊராட்சியில்ரூ.5 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

சாலை அமைக்கும் பணி

அருள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.கோணகாபாடி ஊராட்சி கே.ஆர்.தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் சுற்றுசுவர் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதேபோன்று செம்மண்கூடல் ஊராட்சி எல்லாயூர் கோவில் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இந்த பணிகளுக்கு அருள் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கே.ஆர்.தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அருள் எம்.எல்.ஏ. விலையில்லா சைக்கிள் மற்றும் பேனா வழங்கி பேசினார். தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற பள்ளி மாணவி கனிஷ்காவை அவர் பாராட்டினார். மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

Tags

Next Story