தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்

தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்

அடிக்கல் நாட்டினார் 

சேலம் சிவதாபுரத்தில் தார்சாலை, குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ அருள் துவக்கி வைத்தார்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 22-வது வார்டு சிவதாபுரம், பட்டக்காரன் தெரு பகுதியில் சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் அருள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்து தார்சாலை அமைக்கும் பணியை அருள் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து அவர் 21-வது வார்டு இந்திராநகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதடைந்த குடிநீர் தொட்டியை ரூ.4 லட்சம் செலவில் மாற்றி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், அங்கு தற்காலிக சின்டெக்ஸ் டேங்க் வைக்கப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து அருள் எம்.எல்.ஏ., இந்திரா நகர் பகுதியில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அவர்கள் சாக்கடை வசதி வேண்டியும், நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அருள் எம்.எல்.ஏ. பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், 22-வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், பா.ம.க. பகுதி செயலாளர் சமயவேல், வார்டு செயலாளர்கள் குமார், சம்பத்குமார், தலைவர் சுரேஷ், மாவட்ட துணை செயலாளர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story