சிங்கபெருமாள் கோவிலில் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
முட்புதர் நிரம்பியுள்ள சாலை
சிங்கபெருமாள் கோவிலில் சாலை சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளகி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுார் முதல், வல்லக்கோட்டை வரை, சாலையின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் மற்றும் செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்களை முள்செடிகள் பதம்பார்க்கின்றன. இதனால், விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகின்றன. மேலும், சாலையோரங்களில் ஆங்காங்கே குவிந்துள்ள மண் குவியலால், வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, பராமரிப்பு மோசமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story