ஆலங்குளத்தில் மழையால் சாலை சேதம்: மக்கள் அவதி
ஆலங்குளத்தில் மழை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் லேசான தூறலுடன் தொடங்கிய மழை சற்று நேரத்தில் இடி மின்னலுடன் கனமழையாக மாறியது. இதனால் ஓடைகள், வாய்க்கால்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்குளம் காவல் நிலையம் முதல் நல்லூா் விலக்கு வரையுள்ள தொட்டியான்குளம் கரைப் பகுதியில் நான்கு வழிச்சாலைப் பணிகள் பாலப்பணிகள் காரணமாக மிகவும் மந்த கதியில் நடைபெறும் நிலையில், ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலை உருக்குலைந்து சேறும் சகதியாக மாறியுள்ளது. மேலும், சாலையில் காணப்படும் மேடு பள்ளங்களால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனா். எனவே, நான்குவழிச் சாலைப் பணியைத் துரிதப்படுத்தி, இதற்கிடையே வாகனங்களின் சிரமம் தவிா்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.
Next Story