மழையால் சேதமடைந்த சாலை - பொதுமக்கள் அவதி

மழையால் சேதமடைந்த சாலை - பொதுமக்கள் அவதி

சேதமடைந்த சாலை 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா குழந்திரான்பட்டு ஊராட்சி பூசாரித்தெருவில் சுமார் 60கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமான மண்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெய்து வரும் கன மழையால் குண்டும் குழியுமான மண்சாலையில் மழைநீர் நிரம்பி செல்வதற்கு வழியில்லாமல் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையின் வழியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சென்று வருகின்றனர்‌. மேலும் தற்போது பெய்து வரும் கன மழையால் மண் சாலையில் மழைநீர் நிரம்பி செல்வதற்கு வழியில்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குண்டும் குழியுமான மண்சாலையை சரிசெய்து புதிய தார் சாலை அமைக்கக் கோரி கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருவதாகவும் ஆனால் அரசு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர். குண்டும் குழியுமான மண்சாலையை சரிசெய்து புதிய தார் சாலை அமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story