நெற்குன்றம் சாலையில் விரிவாக்க பணி விறு விறு

நெற்குன்றம் சாலையில் விரிவாக்க பணி விறு விறு

சாலை விரிவாக்க பணிகள்

காஞ்சிபுரம் மாவட்டம், நெற்குணம் கிராமத்தில் சாலை விரிவாக்க பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது நெற்குன்றம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து, ஆனம்பாக்கம் மற்றும் அமராவதிப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் சாலை உள்ளது. மிகவும் குறுகியதான இச்சாலையில், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க இயலாமல் வாகன ஓட்டிகள் அவ்வப்போது சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால், இச்சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைந்த கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இச்சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க, 3.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story