செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சாலை விரிவாக்க பணியாளர்கள்

செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சாலை விரிவாக்க பணியாளர்கள்

செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சாலை விரிவாக்க பணியாளர்கள்

காஞ்சிபுரம் சாலைகளில் உள்ள மரம் செடிகளுக்கு சாலை விரிவாக்க பணியாளர்கள் டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இரு வழிச்சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் வரை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதுதவிர, தார் அமைக்காத சாலையோரம் எம்.சாண்ட் கொட்டி, பேவர் பிளாக் கற்களை அடுக்கி சாலையின் இருபுறமும் அழகுபடுத்தி வருகின்றனர். இதையடுத்து, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையோரம், 10,200 மரக்கன்றுகளை பெரியகரும்பூர், செம்பரம்பாக்கம், ஊவேரி, வெள்ளைகேட்- சித்தேரி தாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையோரத்தில் மரச்செடிகள் நடப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில், செடிகள் கருகிவிடக் கூடாது என, காலை மற்றும் மாலை நேரங்களில், டிராக்டர்கள் வாயிலாக தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இதன் மூலமாக, செடிகள் பசுமையாக இருக்கிறது என, சாலை விரிவாக்க பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்

Tags

Next Story