50 ஆண்டு கனவான போதமலை மலை கிராமத்திற்கு சாலை வசதி

50 ஆண்டு கனவான போதமலை மலை கிராமத்திற்கு ரூ.140 கோடியில் சாலை வசதி - மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போதமலை கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில் ரூ. 140 கோடி மதிப்பீட்டில் 31 கி.மீ சாலைப் பணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் உமா, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN.இராஜேஸ்குமார் பங்கேற்றனர். தொடர்ந்து, ராசிபுரம் அடுத்த வடுகம் அருகேயுள்ள போதமலை அடிவாரம் மற்றும் கெடமலை அடிவாரப்பகுதியில் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN.இராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர். போதமலை கீழூர் பகுதியில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொண்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மலைவாழ் குழந்தைக்கு நெகிழன் என பெயர் சூட்டினார்...

Tags

Next Story