மயானத்திற்கு சாலை வசதி - கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு.
மனு அளிக்க வந்த கிராம மக்கள்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள இரூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக பல தலைமுறையாக அந்த பகுதியில் வசித்து வருவதாகவும், 200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசித்து வரும் அவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தி வரும் மயானத்திற்கு போதிய பாதை வசதி இல்லாததால் மிகவும் சிரமம் அடைவதாகவும், ஈம காரியங்கள் செய்வதற்கு உண்டான விளக்கு மற்றும் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு மயானத்தை சுற்றிலும் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள், அதே கோரிக்கையை வலுயுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். இதுகுறித்து துறை அதிகாரிகள் மூலம் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story