மங்கல தேவி கண்ணகி கோவிலுக்கு சாலை வசதி - விவசாயிகள் கோரிக்கை
மனு அளிக்க வந்த விவசாயிகள்
தேனி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயம் பகுதியில் கண்ணகி கோட்டத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்கல தேவி கண்ணகி திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மங்கலதேவி சித்திரை முழு நிலவு திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா நாளை மங்களதேவி கண்ணகி விழா, சித்திரை பௌர்ணமி முழு நிலவு விழா நடைபெற உள்ளது.
இதற்காக தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வர உள்ள நிலையில் இரு மாநில நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர் கம்பத்தில் இருந்து பனியன்குடி வரை வாகன போக்குவரத்து வசதி உள்ள நிலையில் அங்கிருந்து பொதுமக்கள் வனப்பகுதி வழியே நடந்து சென்று கண்ணகி கோயில் அடைய வேண்டிய நிலை உள்ளது. எனவே கண்ணகி கோயிலுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனுவை அளித்தனர்