ஆபத்தான நிலையில் உள்ள சாலை - தடுப்புசுவர் அமைக்க கோரிக்கை
குமரி மாவட்டம் சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அம்பேத்கர்காலனி, இந்திராகாலனி மற்றும் சுங்கான்கடை சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினம் தினம் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலை ஓரம் நின்ற மரம் மழையில் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் தற்போது கன மழையில் சாலை அரித்துச் செல்லப்பட்டு, சாலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கி விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலையில் தடுப்பு சுவரை கட்டி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
Next Story