கிள்ளியூரில் சாலை சீரமைப்பு பணிகள் - அமைச்சர் துவக்கி வைத்தார்
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுள்ளது
குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கீழ்குளம் பேரூராட்சியில் விழுந்தயம்பலம் - பாலக்காவிளை சாலை, கைத்தடிவிளை - குஞ்சாகோடு சாலை, குமரி நாகர் - காரியங்காட்டுவிழை சாலை, உடவிளை - இனையம் சாலை, பருத்திவிளை - கூவரவிளை சாலை ஆகிய சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டன. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அரசு சம்மந்தபட்ட சாலைகளை சீரமைக்க ரூ. 98 - லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த சாலை பணிகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் மனோதங்கராஜ், ராஜேஷ்குமார் எம் எல் எ பணிகளை னுவக்கி வைத்தனர். பேரூராட்சி தலைவி சரளா கோபால், கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் கோபால், மற்றும் கவுன்சிலர்கள், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story