சாலை திறப்பு : அமைச்சருக்கு இனிப்பு வழங்கிய குழந்தைகள்
குமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சி ஒன்றாவது வார்டுக்குட்பட்ட முள்ளு விளை - மண்ணாரப்பு சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க கேட்டு பொதுமக்கள் தமிழக அரசு கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து அரசு டூரிப் திட்டத்தின் கீழ் ரூபாய் 48.85 லட்சம் ஒதுக்கீடு செய்து, கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று. சாலை பணி தற்போது நிறைவடைந்ததையடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அமைச்சருக்கு அங்கு நின்றிருந்த குழந்தைகள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நிகழ்ச்சியில் மேல்புறம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜேஷ் குமார், களியக்காவிளை பேரூராட்சி செயலாளர் பபின் மற்றும் ஷாஜகான், மாகின் அபுபக்கர், நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்