திறக்கப்பட்டது பாதை - பள்ளி சென்ற குழந்தைகள்

திறக்கப்பட்டது பாதை - பள்ளி சென்ற குழந்தைகள்

பள்ளி செல்லும் குழந்தைகள் 

ஓட்டப்பிடாரம் அருகே கீழ வேலாயுதபுரம் கிராமத்திலிருந்து மேல வேலாயுதபுரம் கிராமத்திற்கு குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று வரவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் பாதை திறந்துவிடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம், புதூர் பாண்டியாபுரம் கிராமம் மஜரா மேல வேலாயுதபுரம் கிராமம் புஞ்சை புல எண் 145/3 ல் 0.36.0 ஹெக்டேர் நிலம் மேகலிங்கம் மகன் லிங்கமுத்து என்பவர் பெயரில் உள்ளது. மேற்படி புலத்திலிருந்து கீழ வேலாயுதபுரம் கிராமத்திற்கு விளக்கிப்பாதை கிராம கணக்கில் உள்ளது. மேற்படி பாதை வழியாக கீழ வேலாயுதபுரம் கிராமத்திலிருந்து மேல வேலாயுதபுரம் கிராமத்திற்கு குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று வரவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

தற்போது மேகலிங்கம் மகன் லிங்கமுத்து என்பவர் பொது பயன்பாட்டிற்காகவும், குழந்தைகள் பள்ளி சென்று வர பயன்படுத்தி வந்த மேற்படி விளக்கி பாதையினை அடைத்து வைத்ததாகவும், அதனால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லாமல் இருப்பதாகவும் வந்த தகவலை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அறிவுறுத்தலின்பேரில், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் மேற்படி இடத்தினை பார்வையிட்டும், மேற்படி கீழ வேலாயுதபுரம் கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மேற்படி விளக்கிப் பாதையினை திறந்துவிட்டனர். இதையடுத்து தற்போது வழக்கம்போல் குழந்தைகள் அந்த பாதை வழியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

Tags

Next Story