திருத்தணி கோவிலில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்!

திருத்தணி கோவிலில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்!

 திருத்தணி முருகன் மலைக்கோவிலில் வாகனங்கள் கீழே இறங்குவதற்கு வசதியாக, நான் கு ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததார் ரோடு அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் வாகனங்கள் கீழே இறங்குவதற்கு வசதியாக, நான் கு ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததார் ரோடு அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து, வாகனங்கள் கீழே இறங்குவதற்கு வசதியாக 9.10 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது மண்சாலை சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், விரைவில் தார்ச்சாலையும் அமைக்கும் வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி, முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்துச் செல்கின்றனர்.

இதுதவிர ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை, டிச., 31ம் தேதி படித் திருவிழா, பங்குனி உத்திரம், ஆடிப்பூரம் மற்றும் மாசி பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய விழாக்களில், லட்சக் கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு வாகனங்களில் வந்து செல்கின்றனர். மண்சாலை தற்போது அனைத்து வாகனங்களும் மலைக்கோவிலுக்கு ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரே தார்ச்சாலை உள்ளதால் விழாக்களின் போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து பக்தர்களின் நலன் கருதி, மலைக்கோவிலில் இருந்து வாகனங்கள் கீழே இறங்குவதற்கு,கோவில் நிர்வாகம் சார்பில் 2019 மார்ச் மாதம் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது. மேலும், இந்த மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றுவதற்கு, திருக்கோவில் நிதியில் இருந்து, 9.10 கோடி ரூபாய் என, திட்ட மதிப்பீடு செய்து இந்து அறநிலையத் துறை ஆணையரின் அனுமதி மற்றும் அரசாணைக்காக, அனுப்பி வைக்கப்பட்டது. கோவில் நிர்வாகம், கீழே இறங்கும் தார்ச்சாலை அமைப்பதற்கு, திருத்தணி நெடுஞ்சாலை துறையினருக்கு, 9.10 கோடி ரூபாய் வைப்பு தொகையாக வழங்கியது. இதுதவிர 2019 - 20ம் ஆண்டு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், 110 விதிகளின் படி கோவில் நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர் இணைந்து திருத்தணி கோவிலில் இருந்து கீழே இறங்கும் தார்ச்சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, கோவில் நிர்வாகம் புதிய தார்ச்சாலை பணிகள் துரிதப்படுத்தி, 2021 பிப்ரவரி மாதத்தில் டெண்டர் விடுவதற்கு தயார் நிலையில் இருந்தனர். சட்டசபை தேர்தல் தேதி அறிவித்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டு பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், தி.மு.க., அரசு சாலைப் பணிகள் மேற்கொள்ளாமல் கண்டு கொள்ளவில்லை. நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மலைக்கோவில் இறங்கும் சாலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Tags

Next Story