கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஷ்ரவன்குமார் துவக்கி வைத்தார். இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ெஹல்மெட் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் அச்சிடப்பட்ட மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் ஏ.கே.டி., பள்ளியில் முடிவடைந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வம், ராஜ்குமார், டி.எஸ்.பி., ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல், நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை பணியாளர்கள், ஆய்வாளர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஷ்ரவன்குமார் துவக்கி வைத்தார்.
இதில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று சாலை விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்கள் நாகரஜான், ஸ்ரீகாந்த், உதவி கோட்ட பொறியாளர்கள் மணிமொழி, ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் சுதாகர், ராஜேஷ், ஸ்வேதா உட்பட பலர் பங்கேற்றனர்.