சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விபத்தில்லா தமிழ்நாடு எங்கள் பொறுப்பு எனும் தலைப்பில் நடந்த நிகழ்வில், நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் திருகுணா தலைமை வகித்தார். ஓட்டுனர் உரிமத்தின் அவசியம், சாலையில் அமைக்கப்படும் முன்னெச்சரிக்கை பலகைகள், சாலை குறியீடுகள் குறித்து பேசினார். சாலை விபத்துக்கான முக்கிய காரணங்கள், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம், விதிமீறல்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பான வாகன பயணம் குறித்து, சாலை பாதுகாப்பு பயிற்சியாளர் நரசிம்மமணி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி வழங்கினார். இதில் அனைவரும் சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உதவி கோட்டப் பொறியாளர் அசோக்குமார், சுரேஷ்குமார், உதவி பொறியாளர் சையது ஹாசிம் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags
Next Story