சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி- டிரினிட்டி கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழ்
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஆன்லைன் வினாடி வினா போட்டியில் டிரினிட்டி கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்! சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமானது இணையவழி வினாடி வினா நிகழ்வினை நடத்தி வருகிறது. இதில் நாமக்கல்- டிரினிடி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் மாணவிகளும் பேராசிரியர்களும் அதிகம் பேர் கலந்து கொண்டு வினாடி வினாவிற்கு விடை எழுதி சான்றிதழ்களை பெற்றனர். அவர்களுக்கு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஏ.கே. முருகன் மற்றும் வாகன ஆய்வாளர் எம். உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பேராசிரியர்களையும் மாணவிகளையும் பாராட்டினர்.

Tags

Next Story