ஆத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் காமராஜர் சிலை அருகில் ஆத்தூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, ஆத்தூர் உட்கோட்ட காவல் துறை, போக்குவரத்து துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர் பேரணியில் பொதுமக்களை கவரும் வகையில் குதிரை சவாரி செய்து மாணவிகள் பதாகைகள் ஏந்திய வாரும், இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும் முன்பு எரிபொருட்கள், பிரேக் மற்றும் விளக்கு போன்ற வாகன பராமரிப்புகளை சரி பார்க்கவும் தலைக்கவசம் அணியவும் சாலையில் வளைந்து வாகனத்தை இயக்குவதை தவிர்க்கவும் கூடுதலாக ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது.
மோட்டார் சைக்கிள் செல்வதற்கான பாதை அமைத்து இருப்பின் முறையான பாதையில் செல்லவும் பாதுகாப்பான வேகத்தில் செல்லவும் திரும்பும் முன்பே சிக்னல் போட்டு சாலை கடக்க வேண்டும், சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்கவும்,இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மது அருந்தஇ விட்டு வாகனத்தை ஓட்டக்௯டாது. இருசக்கர வாகன ஓட்டி தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு வாசகங்களை பதாகையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்.
நரசிங்கபுரத்தில் தொடங்கிய பேரணி கூட்ரோடு விநாயகபுரம் வழியாக உடையார்பாளையம் காந்தி சிலை பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் அரசு பள்ளி மாணவ மாணவிகள், சேவை சங்கத்தினர், வருவாய் துறையினர், காவல்துறையினர் கலந்துகொண்டனர்.