செஞ்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

செஞ்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

செஞ்சியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் துவக்கி வைத்தார்.

சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் வாகன விழிப்புணர்வு பேரணி செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை அருகே நடைபெற்றது. இதற்கு செஞ்சி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜன் கலந்து கொண்டு சாலை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.

குறிப்பாக கார்களில் செல்பவர்கள் சீட்பெல்ட் கண்டிப் பாக அணிய வேண்டும் என வலியுறுத்தினார். சிறப்பு அழைப்பாள ராக செஞ்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பலர் தங்களது கார்களில் சீட்பெல்ட் அணிந்து பேரணியாக முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தனர். இதில் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் சேகர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக பணியாளர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story