கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்

கோவில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி வெங்கடேஷ்  துவக்கி வைத்தார்.

கோவில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி வெங்கடேஷ் துவக்கி வைத்தார். நாடு முழுவதும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.

கோவில்பட்டியில் டிஎஸ்பி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி எட்டையாபுரம் ரோடு ஆர்டிஓ அலுவலகம்வழியாக மீண்டும் டிஎஸ்பி அலுவலகத்தை வந்தடைந்தது.இதில் நாடார் மேல்நிலைப் பள்ளி, வஉசி அரசு மேல்நிலைப் பள்ளி, நாடார் நடுநிலைப் பள்ளி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி, காமராஜ் காமராஜ் இன்டர்நேஷனல் பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ஜேசிஐ முன்னாள் தலைவர்கள் கண்ணப்பன், முரளி கிருஷ்ணன், தீபன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட இயக்குனர் சியாம் சுந்தர் வரவேற்றார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஜேசிஐ நிர்வாகிகள், ரகுபதி, அகிலேஷ், சூர்யா, லோகேஷ், உதயா , வீனாபிரகாஷ், சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஜேசிஐ செயலாளர் அருண் பிரசாத் நன்றி கூறினார்.

Tags

Next Story