விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது. இதை மோட்டார் வாகன ஆய்வாளர் கோவிந்தராஜ், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு கல்லூரி மாணவ- மாணவிகள், தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற்று வரும் பயிற்றுனர்கள் பலர் கலந்துகொண்டு இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித் தும், கார்களில் பயணிக்கும்போது சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்குமுனை சந்திப்பு அருகில் முடிவடைந்தது.
Next Story