சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா பேரணி

வேளாங்கண்ணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி இரு சக்கர பேரணியை போலீஸ் எஸ்.பி., மாவட்ட ஹர்ஷ்சிங் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன்படி கடந்த 15ஆம் தேதி முதல் இந்த மாதம் 14ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது, அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர பேரணி நடைபெற்றது, பேரணியை நாகப்பட்டினம் மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்,

பேரணியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர்கள், நடுதிட்டு விடுதி வழிகாட்டோர் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனர் வேளாங்கண்ணி பேராலய முகப்பு பகுதியில் தொடங்கிய பேரணி கடற்கரைசாலை ,பேருந்து நிலையம் ,மாதாகுளம், வேளாங்கண்ணி ஆர்ச் வழியாக சென்று சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு செருதூர் பாலத்தில் நிறைவடைந்தது சாலைகளில் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் ,வாகன ஓட்டிகள் தங்களிடம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் போன்றவற்றை வலியுருத்தி சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்கள் விலையில்லா தலைக்கவசத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Tags

Next Story