சாலை பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் வாகனங்களில் பயணிப்போர் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருப்பூர் மாநகர காவல் துறை மற்றும் போக்குவரத்து துறையின் சார்பில் விபத்துகளை தடுக்கும் விதமாக ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாத விழா நிகழ்த்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் , இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் , இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாநகர காவல் துறை, போக்குவரத்து காவல்துறை , ஊர்க்காவல் படை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் இருசக்கர வாகனத்தில் அணிந்தவாறு விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு வாகண பேரணியை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags

Next Story