இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழா

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு மாதவிழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 06.02.2024 அன்று சாலைப் பாதுகாப்பு மாதவிழா நடைபெற்றது. தமிழ்துறைத்தலைவர் கே. அப்துல் ரஹீம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் எஸ்.இ.எ. ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் ஏ. முஸ்டாக் அஹமது கான், ஆங்கிலத்துறைத்தலைவர் முனைவர் எம். ஷர்மிளா பானு மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் எஸ். காளிதாசன் ஆகியோர் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து உரையாற்றினர். சிறப்பு விருந்தினராக இளையான்குடி, போக்குவரத்துக் காவல் சார்பு ஆய்வாளர் பார்த்திபன் அவர்கள் கலந்துகொண்டு சாலைப் பாதுகாப்பு, விபத்து தடுப்பு முறைகள் மற்றும் ஹெல்மட் அணிவதின் அவசியம் குறித்து உரையாற்றினார். நிகழ்வில் போக்குவரத்துக் காவலர் கண்ணன் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story