சேலத்தில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலத்தில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி


சேலத்தில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை போக்குவரத்து துணை கமிஷனர் பிரபாகரன் துவக்கி வைத்தார்


சேலத்தில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை போக்குவரத்து துணை கமிஷனர் பிரபாகரன் துவக்கி வைத்தார்

சேலம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் நேற்று கார்களில் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானாவில் நடந்தது.

இதில் போக்குவரத்து துணை கமிஷனர் பிரபாகரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரகுபதி, அறிவழகன், தாமோதரன், போலீஸ் உதவி கமிஷனர் உதயகுமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் சதாசிவம், ஆர்.மாலதி, கவிதா, ராமரத்தினம், போக்குவரத்து இன்பெக்டர்கள் கிட்டு, மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் மேனகா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணி ஏ.வி.ஆர். ரவுண்டானாவில் தொடங்கி கொண்டலாம்பட்டி பைபாஸ் ரோடு வரை நடந்தது. இதில் சேலத்தில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளி வாகனங்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கலந்து கொண்டன.

Tags

Next Story