சேலத்தில் சாலை பாதுகாப்பு மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசுகையில், சாலை விபத்துக்களை முற்றிலும் குறைத்து விபத்தில்லா பயணத்தை உருவாக்கிடும் வகையில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகளவு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் தொடர் விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து போலீஸ் துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கு எதிர்வரும் காலங்களில் விபத்துக்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி, போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், துணை கமிஷனர் பிருந்தா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.