நாகர்கோவிலில் சாலை விரிவாக்கம் - அதிகாரிகள் ஆய்வு

நாகர்கோவிலில் சாலை விரிவாக்கம் - அதிகாரிகள் ஆய்வு

ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் 

நாகர்கோவிலில் வடசேரி- வேப்ப மூடு சந்திப்பு சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவது குறித்து நெடுஞ்சாலை துறை சாலை பாதுகாப்பு அலகு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியிலுள்ள ரோடுகள் அகலம் குறைவாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்கு இடையே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முக்கிய சந்திப்புகளில் ரவுண்டான அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

எனவே வடசேரி முதல் வேப்ப மூடு சந்திப்பு வரை உள்ள சாலையை இருவழிப்பாதையாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நிர்வாக கமிஷனருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் இந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலை துறை சாலை பாதுகாப்பு அலகு அதிகாரிகள் வந்து வடசேரி முதல் வேப்ப மூடு சந்திப்பு வரை உள்ள சாலையை விரிவு படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்தனர்.

வடசேரி ரவுண்டாரா பகுதி, பாலமோர் ரோடு, வேப்ப மூடு சந்திப்பு போன்ற இடங்களில் சாலை விரிவாக்கம் செய்ய தேவைப்படுகிற இடங்களை அதிகாரிகள் சர்வே செய்தனர். இந்த ஆய்வு அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் விரிவாக்கம் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story