செஞ்சி அருகே ரூ.2 கோடியில் சாலை விரிவாக்கப்பணி -அதிகாரி ஆய்வு

செஞ்சி அருகே ரூ.2 கோடியில் சாலை விரிவாக்கப்பணி -அதிகாரி ஆய்வு
 சாலை விரிவாக்கப்பணியை அதிகாரி ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் செஞ்சி அடுத்த வல்லத்தில் இருந்து தொண்டூர் செல்லும் சாலை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி மற்றும் புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பாலம் மற்றும் சாலை விரிவாக்கப்பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்குமாறு செஞ்சி கோட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின்போது செஞ்சி கோட்ட பொறியாளர் அக்பர் அலி, இளநிலை பொறியாளர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story