விக்கிரவாண்டி அருகே சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்
விக்கிரவாண்டி அருகே சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து விபத்துகளை தவிர்ப்பதற்காக மேம் பாலம் அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை அடுத்து திருச்சி-சென்னை சாலையில் இருந்து தஞ்சாவூர் சாலை பிரியும் இடத்தில் திருச்சி-சென்னை மார்க்கத்தில் மேம்பாலம் உள்ளது. தற்போது அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பனாம்பட்டில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இதையடுத்து விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் இருந்து முண்டியம்பாக்கம் வழுதாவூர் கூட்டு ரோடு வரை 2கிலோ மீட்டர்தூரத்துக்குசாலையை அளவீடு செய்யும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக தற்பொழுதுள்ள 4 வழிச்சாலையில் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் இருந்து 21 மீட்டர் அகலத் துக்கு இரு புறமும் இணைப்பு சாலை மற்றும் மழை நீர் வடி கால் வாய்க்கால் அமைக்க சாலையை அளவீடு செய்து சாலையோர மரங்கள் அகற்றப்பட்டு மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.