சாலை விரிவாக்க பணிகள் - அருள் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

சாலை விரிவாக்க பணிகள் - அருள் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

சாலை விரிவாக்க பணிகள் - அருள் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

சாலை விரிவாக்க பணிகள் - அருள் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 21-வது வார்டு, புதுரோடு பகுதியானது இரும்பாலை சாலையும் முத்துநாயக்கன்பட்டி சாலையும் இணையும் பகுதியாகும். இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்து, அங்கு ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் அருள் எம்.எல்.ஏ. பேசி கோரிக்கை வைத்தார். இதையடுத்து அங்கு சாலை விரிவாக்க பணிக்கு ரூ.5 கோடியே 70 லட்ச ஒதுக்கீடு செய்து அந்த பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணி தொய்வாக நடைபெறுவதை அறிந்த அருள் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி சாலை பணியை விரைந்து முடிக்க கோரி அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து அங்கு உள்ள மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தன், தங்கராசு, ஒன்றிய செயலாளர் இளங்கோவன், வார்டு செயலாளர்கள் சம்பத், அருள், அய்யந்துரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story