கணக்கம்பாளையத்தில் சாலை பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
பூமி பூஜை
திருப்பூர் கணக்கம்பாளையத்தில் சாலைஅமைக்கும் பணிக்கு பூமிபூஜையை அமைச்சர் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம்,கணக்கம் பாளையம் முதல் பெருமாநல்லூர் கே.ஆண்டிபாளையம் வரை, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைகள், பேவர் ப்ளாக் அமைக்கும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் ,ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் , இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ் ,கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Tags
Next Story