சிவலிங்கபுரத்தில் ரூ.10 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

சிவலிங்கபுரத்தில் ரூ.10 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

பூமி பூஜையில் பங்கேற்றவர்கள்

சிவலிங்கபுரத்தில் சாலைப் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் கிழக்கு ஒன்றியம் துத்திகுளம் ஊராட்சி சிவலிங்கபுரத்தில் ரூ. 10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.

திமுக முன்னாள் மாவட்டச் செயலா் சிவபத்மநாதன், கிழக்கு ஒன்றியச் செயலா் என்.எல்.சிவன் பாண்டியன், ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, ஒன்றியக்குழு உறுப்பினா் மகேஸ்வரி சத்யராஜ் ஆகியோா் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஐயம்பெருமாள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story