அரசு பஸ் மோதி சாலை பணியாளர் பலி!

அரசு பஸ் மோதி சாலை பணியாளர் பலி!

அரசு பஸ் மோதி சாலை பணியாளர் பலி

அரசு டவுன் பஸ் எதிர்பாராதவிதமாக மோதியதில் சாலை பணியாளர் பலி. போலீசார் விசாரணை
பொன்னமராவதி: சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் பழனி(57). சாலைப்பணியாளரான இவர் சம்பவத்தன்று பொன்னமராவதி அருகே கேசராபட்டி உலகம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். மட்டாமலை என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக கொட்டாம் பட்டியில் இருந்து பொன்னமராவதிக்கு வந்த அரசு டவுன் பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பழனி அதே இடத்தில் உயிரிழந்தார். மேலும், கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் பள்ளத்தில் இறங்கியது. பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பஸ் டிரைவர் பொன்னமராவதி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story