தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம் 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் அலங்கியம் சாலையில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் கே. வெங்கடசாமி கோட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இதில் வி தங்கவேல் மற்றும் ஆர் செல்வகுமார் கோட்ட துணைத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் என் சிவக்குமார் மற்றும் ஏ மணிமொழி கோட்டை இணை செயலாளர், ஆர் ஜெகதீஸ்வரன் மாநில செயற்குழு உறுப்பினர், எல் தில்லையப்பன் கோட்டை செயலாளர் கோரிக்கை விளக்க உரையை இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் மா பாலசுப்பிரமணியன் மாநிலத் தலைவர் சிறப்புரையாற்றினர்.

தமிழக அரசையும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்தையும் கண்டித்தும் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதன் மூலம் 3500 க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் சாலை ஆய்வாளர் பணியிடம் ஒழிக்கப்படும் அபாயமும், சுங்கச்சாவடி அமைத்து சுங்கவரி தனியார் வசூலிக்க அனுமதிக்காதே. நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும், கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் வேலை வழங்கி வாழ வைக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலைத்துறையில் மீண்டும் சீரமைப்பு செய்து நிரந்தர பணியிடங்களை ஒழிப்பதா ? ஓய்வு பெற்ற ஊழியர்களைக் கொண்டு பணி மேற்கொள்வதா ? இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதா?

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இறுதியாக எஸ் முருகசாமி கோட்டப்பொருளாளர் நன்றியுரை ஆற்றினார்.

Tags

Next Story