36-வது வார்டு பகுதியில் ரூ.2 கோடிக்கு சாலைப்பணிகள் !

36-வது வார்டு பகுதியில் ரூ.2 கோடிக்கு சாலைப்பணிகள் !

 சாலைப்பணிகள்

36-வது வார்டு பகுதியில் ரூ.2 கோடிக்கு சாலைப்பணிகள் நடைபெற்று உள்ளன - மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி கூறினார்
சேலம் மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட இளம் தோப்பு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், கவுன்சிலருமான யாதவமூர்த்தி நேரில் பார்வையிட்டு, சாலைகள் தரமாக அமைக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தினார். அதன்பிறகு அவர் கூறியதாவது:- 36-வது வார்டு பகுதியில் ரூ.5 கோடியே 20 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் கூறுகின்றனர். ஆனால் ரூ.5 கோடியில், ரூ.3 கோடியில் 3 இடங்களில் உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பண்டல் தயாரிக்கும் குடோன், குப்பையின் எடை அளவுக்கான வே -பிரிட்ஜ் கட்டுமான பணிகள் கட்டப்பட்டு உள்ளன. மீதி ரூ.2 கோடியே 20 லட்சத்தில் தார்சாலை பணிகள் மட்டுமே நடைபெற்று உள்ளன. வார்டு மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. அதன்படி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுத்தப்படுகிறது. வார்டு அலுவலகம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் அரசியல் காரணத்தால், வார்டு அலுவலக கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. நானும் ஒரு மக்கள் பிரதிநிதிதான் வார்டில் பல இடங்களில் சாக்கடை கால்வாய், தெரு விளக்கு அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இன்னும் செயல்படுத்த வில்லை. மயான கூரை இடிந்து பல நாட்கள் ஆகியும் சரி செய்ய வில்லை. மின் மயானம் பராமரிப்பு இல்லை. மயான சுற்றுச்சுவர் இடிந்து உள்ளது. இவைகளை சரிப்படுத்தக்கோரி பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. நடவடிக்கை இல்லை கல்வி நிதியின் மூலம் மற்ற வார்டுகளுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் 36-வது வார்டுக்கு ரூ.24 லட்சம் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story