தூத்துக்குடி மாநகரில் சாலைப் பணிகள் நிறைவு : மேயர் தகவல்

தூத்துக்குடி மாநகரில் சாலைப் பணிகள் நிறைவு : மேயர் தகவல்

பைல் படம்

தூத்துக்குடி மாநகரில் ரூ.154.46 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் சுமார் 75% நிறைவு பெற்றுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகரில் ரூ.154.46 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் சுமார் 75% நிறைவு பெற்றுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மாநகரிலும் பகுதி சபா உறுப்பினர்களை கொண்டு பகுதி சபா கூட்டங்களை நடத்தும்படி ஆணை பிறப்பித்திருந்தார். அதன்படி பகுதி சபா கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை சார்ந்த வார்டு சபா உறுப்பினர்களை சந்தித்து அவர்கள் பகுதியில் நடைபெற்று முடிந்த பணிகள் மற்றும் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் கலந்தாலோசித்தேன். அப்போது தூத்துக்குடி மாநகரில் 154.46 கோடி மதிப்பீட்டில் பல பகுதிகளில் 75% மற்றும் சில பகுதிகளில் 100% சாலை பணிகளும் நிறைவடைந்துள்ளன மேலும் இது போல பல பகுதிகளில் வடிகால் பணிகளும் நிறைவடைந்துள்ளன என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். .

Tags

Next Story