சென்னையில் சாலைப்பணிகள் - மாநகராட்சி டெண்டர்

சென்னையில் சாலைப்பணிகள் - மாநகராட்சி டெண்டர்

சென்னை மாநகராட்சி

சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும் ரூ.282 கோடி மதிப்பில் டெண்டர் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாலைப்பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. ஆகஸ்ட் 7ல் டெண்டர் திறக்கப்பட்டு, பணி ஆணைகள் வழங்கிய பின் ஒவ்வொரு பகுதியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

15 மண்டலங்களிலும் சேதமடைந்த சாலைகள், புதிதாக அமைக்க வேண்டிய சாலைகள் என 2,118 சாலைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.282 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story